பரபரப்பு செய்திகள் ஆளில்லா விமானம் வாங்கும் பாகிஸ்தான் !

ஆளில்லா விமானம் வாங்கும் பாகிஸ்தான் !

ஆளில்லா விமானம் வாங்கும் பாகிஸ்தான் ! post thumbnail image
இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் 48 அதிநவீன ஆளில்லா விமானங்களை சீனாவிடம் இருந்து வாங்குகிறது.

இந்திய, ரஷிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கடந்த வாரம் டெல்லி வந்திருந்தார், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின். பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

அதனை தொடர்ந்து, ரஷியாவிடம் இருந்து 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.37 ஆயிரம் கோடி) மதிப்பில் அதிநவீன ‘எஸ்-400’ ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

250 கி.மீ. தொலைவில் வரும் போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அடங்கும்.

இந்த ஒப்பந்தம், அண்டை நாடான பாகிஸ்தானை வேதனை அடைய வைத்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் இப்போது இருந்து வரும் வேளையில் இந்தியாவுக்கு போட்டியாக சீனாவிடம் விமானங்களை வாங்க எடுத்துள்ளது.

சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் 48 அதிநவீன ‘விங் லூங்-2’ ஆளில்லா விமானங்களை வாங்க உள்ளது. இதனை சீனாவின் செங்டு விமான தொழில் நிறுவனம் தயாரிக்கிறது.

இவை பாகிஸ்தானும் கூட்டாக தயாரிக்க முடிவாகி உள்ளது. இதுகுறித்து வேறு எந்த விவரமும் தெரியவில்லை.

பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து ‘ஜே.எப். தண்டர்’ என்னும் ஒற்றை என்ஜின் கொண்ட போர் விமானங்களையும் கூட்டாக தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி