செய்திகள்,முதன்மை செய்திகள் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த, காயமடைந்தோர் குடும்பங்களுக்கு அரசுப் பணி: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த, காயமடைந்தோர் குடும்பங்களுக்கு அரசுப் பணி: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

ஸ்டெர்லைட்  போராட்டத்தில் உயிரிழந்த, காயமடைந்தோர் குடும்பங்களுக்கு அரசுப் பணி:  முதல்வர் பழனிசாமி வழங்கினார் post thumbnail image
தூத்துக்குடி மாவட்டத்தில் 22.5.2018 மற்றும் 23.5.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட்போராட்டத்தின் போது உயிர் இழந்தவர்களுக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல் அமைச்சர் பழனிசாமி கடந்த மே 27-ந் தேதி அன்று உத்தரவிட்டிருந்தார். அவர் சொன்னபடி அதற்கான காசோலை வழங்கப்பட்டது.

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது பாதிக்கப்பட்ட 19 பேரின் குடும்பத்தினர் உட்பட 25 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் வியாழக்கிழமை அன்று வழங்கினார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என தமிழக அரசு கூறியிருந்தது.அதன்படி, நேற்று முதல்வர் பழனிசாமி பணிநியமன ஆணைகளை தலைமை செயலகத்தில் நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்.

இதேபோல், வேளாண்மைத் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 45 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி