செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் தேவையில்லாமல் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்வதால் தொற்றுநோய் அபாயம்!…

தேவையில்லாமல் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்வதால் தொற்றுநோய் அபாயம்!…

தேவையில்லாமல் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்வதால் தொற்றுநோய் அபாயம்!… post thumbnail image
ஜெனிவா:-வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிள் மருத்துவ அவசியம் ஏற்படாத நிலையிலும் பலர் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் மகப்பேறு சுகாதார துறையின் இயக்குனர் மர்லீன் தெரிவித்துள்ளார்.ஆனால் வளர்ச்சியடையாத பல நாடுகளில் சரியான நேரத்தில் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்ய முடியாமல் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.

பிரேசில் போன்ற நாடுகளில் 53 சதவீதம் பிரசவங்கள் அறுவைசிகிச்சை மூலம் நடப்பதாக தெரியவந்துள்ளது. பிரசவம் என்றாலே அறுவைசிகிச்சை என்ற கலாச்சாரம் பல நாடுகளில் நிலவுவதாகவும் மார்லீன் கூறியுள்ளார். ஆனால் ஒரு நாட்டில் மகப்பேறு அறுவைசிகிச்சையின் சதவீதம் 10 முதல் 15 சதவீதம் வரைதான் இருக்கவேண்டும். அதேபோல் இந்த அளவு 10 சதவீதத்துக்கு கீழே இருந்தால், சரியான நேரத்தில் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்ய முடியாமல் உயிர் இழப்புகள் ஏற்படுவதாக அர்த்தம்.

2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு படி ஐரோப்பாவில் 23 சதவீதமும், அமெரிக்காவில் 35 சதவீதமும் மகப்பேறு அறுவைசிகிச்சைகள் நடக்கின்றன. ஆனால் ஆப்பிரிகா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில், இது முறையே 3.8 மற்றும் 8.8 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி