செய்திகள்,முதன்மை செய்திகள் புகழ் பெற்ற இந்திய மலையேற்ற வீரர் உடல் கண்டுபிடிப்பு!…

புகழ் பெற்ற இந்திய மலையேற்ற வீரர் உடல் கண்டுபிடிப்பு!…

புகழ் பெற்ற இந்திய மலையேற்ற வீரர் உடல் கண்டுபிடிப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மலையேற்ற வீரர் மாலி மஸ்தான் பாபு. கடந்த டிசம்பர் மாதம் 16-ம்தேதி அர்ஜென்டினா மற்றும் சிலி எல்லையில் அமைந்துள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில் மலையேற்றம் செய்வதற்கு சென்றார். ஆனால் அப்பகுதில் நிலவிய மோசமான கால நிலையால் மார்ச் மாதம் 24-ம்தேதி முதல் அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் தொடர் அழுத்தம் காரணமாக இந்திய வெளியுறவுத் துறை அந்த நாட்டுடன் தொடர்பு கொண்டு அவரை தேடும் பணியை முடுக்கிவிட்டது. மாலியின் சகோதரியும் அங்கு சென்று தேடுதல் பணியை கவனித்து வந்தார். சமூக வலைத்தளங்களிலும் மாலியை கண்டுபிடிக்க கோரி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது மாலியின் இறந்த உடல் கண்டுபிடித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்கள்.

ஆந்திராவில் இருந்து உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் ஏறிய முதல் நபர், அண்டார்டிகாவில் உள்ள உயரமான சிகரத்தில் ஏறியவர் என்பது உட்பட பல சாதனைகளை தன்வசம் வைத்து உள்ளார் மாலி. இந்நிலையில் மலைகள் தங்கள் செல்ல குழந்தையை தாங்களே வைத்து கொண்டுவிட்டதாக, மாலியை கண்டுபிடிக்க வலியுறுத்தி உருவாக்கப்பட்ட பேஸ்புக் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மலைகளின் காதலனுக்கு நேர்ந்த இந்த சோகம் பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி