செய்திகள் 75 வயது மூதாட்டியை கற்பழித்த கும்பல்!…

75 வயது மூதாட்டியை கற்பழித்த கும்பல்!…

75 வயது மூதாட்டியை கற்பழித்த கும்பல்!… post thumbnail image
லக்னோ:-உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய மாவட்டமான லகிம்புர் கெரி மாவட்டத்தில் உள்ள நீம்கான் கிராமத்தை சேர்ந்த சுமார் 75 வயது மதிக்கத்தக்க பெண் நேற்றிரவு தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு வேளையில் அவரது வீட்டுக்குள் புகுந்த ஒரு சமூக விரோத கும்பல் அவரது வயோதிகத்தை கூட பொருட்படுத்தாமல் அந்த மூதாட்டியை மாறி, மாறி கற்பழித்துவிட்டு தப்பிச் சென்றது.

இன்று காலை பொழுது விடிந்ததும் அந்த மூதாட்டியின் கூச்சலை கேட்டு விரைந்துவந்த கிராம மக்கள் இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி