அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் மன்மோகன்சிங் அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்!…

மன்மோகன்சிங் அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்!…

மன்மோகன்சிங் அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்!… post thumbnail image
புதுடெல்லி:-நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக மன்மோகன்சிங் உள்ளிட்ட 6 பேருக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது. அதில் மன்மோகன்சிங் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தகவல் வெளியானதும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் மன்மோகன்சிங் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆதரவாக இருப்போம் என்று உறுதி அளித்தனர். இந்த பிரச்சனையை எப்படி எதிர் கொள்வது என்பது குறித்து ஆலோசனையும் நடத்தினார்கள். அதை தொடர்ந்து, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தின் சம்மனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மன்மோகன்சிங் சார்பாக அப்பீல் மனு தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான அப்பீல் மனு தயாரிக்கும் பணி நடந்தது.

மூத்த வக்கீல்கள் கபில்சிபல், டி.எஸ்.துள்சி ஆகியோர் இந்த அப்பீல் மனுவுக்கு இறுதி வடிவம் கொடுக்கிறார்கள். அதன் பிறகு மன்மோகன்சிங் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனுதாக்கல் செய்யப்படும். அடுத்த வாரம் இது தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்று கபில் சிபல், துள்சி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி