செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பெருநிறுவன தலைவர்கள் மாநாட்டுக்கு 2 இந்தியர்களுக்கு அழைப்பு!…

பெருநிறுவன தலைவர்கள் மாநாட்டுக்கு 2 இந்தியர்களுக்கு அழைப்பு!…

பெருநிறுவன தலைவர்கள் மாநாட்டுக்கு 2 இந்தியர்களுக்கு அழைப்பு!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்காவில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் விதமாக “அமெரிக்காவை தேர்ந்தெடுங்கள்” என்ற மாநாடு வரும் மார்ச் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நிறுவனங்களின் தலைவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர்களில் இருவர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரை சேர்ந்த விஜய் சந்துரு மற்றும் அமெரிக்க வாழ் இந்தியரான தேஷ்பாண்டே ஆகிய இருவருக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருவரில் விஜய் சந்துரு, பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஸ்டேன்டர்ட் லைப் சையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார். தேஷ்பாண்டே, ஸ்பாட்ரா குழுமத்தின் தலைவர் ஆவார்.

இந்த மாநாட்டில் செயலாளர் பென்னி பிரிட்ஸ்கர் கூறும் போது, உலகிலே முதலீடு செய்வதற்கு சிறந்த இடமாக அமெரிக்கா திகழ்கிறது. இதை பெருநிறுவனங்களும் புரிந்து கொண்டுள்ளன. உள்கட்டமைப்பு, குறைந்த விலையில் மின்சாரம், ஆய்வுக்கான சூழ்நிலை என முன்னெப்போதும் இல்லாத அளவில், தற்போது முதலீட்டுக்கான சூழ்நிலை சிறப்பாக உள்ளது என தெரிவித்தார். மாநாட்டில் கலந்து கொள்ளும் 20 பேரில் கூகுள், நிஸான் மோட்டார் நிறுவனங்களின் இயக்குனர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி