செய்திகள்,திரையுலகம் வஜ்ரம் (2015) திரை விமர்சனம்…

வஜ்ரம் (2015) திரை விமர்சனம்…

வஜ்ரம் (2015) திரை விமர்சனம்… post thumbnail image
ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி ஆகிய நான்கு பேரும் நண்பர்கள். இவர்கள் தன்னுடன் படிக்கும் பள்ளி மாணவியை கற்பழித்த குற்றத்திற்காக சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்படுகிறார்கள். அங்கு ஜெயிலர்கள் இவர்கள் நான்கு பேரையும் சித்ரவதை செய்கிறார்கள். இந்த சித்ரவதை அளவிற்கு அதிகமாக செல்ல, ஜெயிலர்களை அடித்து தும்சம் செய்கிறார்கள். இந்த விஷயம் உயர் அதிகாரிக்கு செல்கிறது. இதற்கிடையில் மந்திரி ஜெயப்பிரகாஷின் பினாமியாக இருக்கும் போலீஸ் உயர் அதிகாரி, ஜெயப்பிரகாஷின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அடைய முயற்சி செய்கிறார். இந்த சூழ்நிலையில் சீர்திருத்தப்பள்ளியில் நான்கு சிறுவர்களை சந்திக்கும் உயர் அதிகாரி, மேல் விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்று, செல்லும் வழியில் வாகனத்தை வெடிக்க வைத்து அவர்கள் இறந்து விட்டதாக நாடகமாடி சிறுவர்களை கடத்துகிறார்.

கடத்திய சிறுவர்களிடம் நான் உங்களுக்கு மறுவாழ்வு அளித்திருக்கிறேன். எனக்கு உதவியாக மந்திரியான ஜெயப்பிரகாசை கடத்த வேண்டும் என்று கட்டளையிடுகிறார். இதற்கு முதலில் மறுப்பு தெரிவிக்கும் சிறுவர்கள் பின்னர், கடத்த சம்மதிக்கிறார்கள். கடத்துவதற்கு திட்டத்தையும் வகுத்து கொடுத்து, ஆயுதங்களையும் போலீஸ் அதிகாரி கொடுத்து அனுப்புகிறார்.ஆனால் சிறுவர்கள் மந்திரி ஜெயப்பிரகாஷிற்கு பதிலாக அவளுடைய மகளான பவானி ரெட்டியை கடத்தி மலைப்பகுதிக்கு சென்று விடுகிறார்கள். இதனால் அதிர்ந்து போகும் போலீஸ் அதிகாரி, நான்கு சிறுவர்களையும், பவானி ரெட்டியையும் கொல்ல வனக்காவலர்களுக்கு உத்தரவிடுகிறார். வனக்காவலர்கள் சிறுவர்களை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து போலீஸ் அதிகாரிக்கு தகவல் கொடுக்கிறார்கள்.போலீஸ் அதிகாரி சிறுவர்களை கொல்ல வனப்பகுதிக்கு வருகிறார். அங்கு சிறுவர்கள் வன அதிகாரியை அடித்து தப்பித்து செல்கிறார்கள். இறுதியில் போலீஸ் அதிகாரி சிறுவர்களை கொன்றாரா? சிறுவர்கள், மந்திரியான ஜெயப்பிரகாஷின் மகளை கடத்துவதற்கு காரணம் என்ன? இவர்கள் சீர்திருத்தப்பள்ளிக்கு சென்றதன் பின்னணி என்ன? என்பதே மீதிக்கதை.படத்தில் சிறுவர்களாக நடித்திருக்கும் ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி ஆகியோர் முதல் படத்தில் நடித்ததை விட பல மடங்கு வளர்ந்து நடிப்பில் வளர்ந்திருக்கிறார்கள். நான்கு பேருக்கும் சமமான கதாபாத்திரம் அமைத்திருக்கிறார்கள். அவர்களும் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

நாயகியாக நடித்திருக்கும் பவானி ரெட்டி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜெயப்பிரகாஷ் மந்திரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவருக்கு மனைவியாக வரும் சானா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.பசங்க, கோலிசோடா படத்தில் குறும்பு, சேட்டை செய்து நடித்து வந்த சிறுவர்களை இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காண்பிக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ் செல்வன். ஆனால் அந்த முயற்சி சரியான திசையில் பயணிக்கவில்லை என்றே சொல்லலாம். சிறுவர்களை ஆக்‌ஷன் ஹீரோவாக பார்க்க முடியவில்லை. படத்தில் சுவாரஸ்யம் குறைவாகவே உள்ளது. லாஜிக் மீறல்களையும் தவிர்த்திருக்கலாம்.பைசல் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். குமரேசன் தனது ஒளிப்பதிவில் வனப்பகுதிகளை அழகாக காட்ட முயற்சி செய்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘வஜ்ரம்’ குழப்பம்………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி