செய்திகள்,திரையுலகம் ’10 எண்றதுக்குள்ள’ பட டைட்டில் ரகசியம் கூறிய விஜய் மில்டன்!…

’10 எண்றதுக்குள்ள’ பட டைட்டில் ரகசியம் கூறிய விஜய் மில்டன்!…

’10 எண்றதுக்குள்ள’ பட டைட்டில் ரகசியம் கூறிய விஜய் மில்டன்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் 10 எண்றதுக்குள்ள. இப்படத்தை ‘கோலிசோடா’ என்ற வெற்றி படத்தை இயக்கிய விஜய் மில்டன் தான் இயக்குகிறார். சமீபத்தில் ஒரு முன்னணி நாளிதழில் பேட்டியளித்த விஜய் மில்டன், ‘10 எண்றதுக்குள்ளே’ படத்தில் விக்ரம் ஒப்பந்தமானதே சுவாரசியமானது. ‘கோலிசோடா’ படத்தை திரையரங்கில் பார்த்து விட்டுப் போன் செய்து பாராட்டினார்.

எனக்கு ஏதாவது கதை இருக்கிறதா என்றார். ஒன் லைன் சொன்னேன், உடனே கூப்பிட்டார். அப்போது இரவு 10 மணி, போய் கதை சொன்னேன், உடனே ஓகே செய்தார். அந்தப்படம்தான் ’10 எண்றதுக்குள்ள’ என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி