செய்திகள்,திரையுலகம் டுவிட்டரில் புதுமை படைத்த நடிகர் ஷாருக்கான்!…

டுவிட்டரில் புதுமை படைத்த நடிகர் ஷாருக்கான்!…

டுவிட்டரில் புதுமை படைத்த நடிகர் ஷாருக்கான்!… post thumbnail image
மும்பை:-பாலிவுட்டின் பாட்ஷா நடிகர் ஷாருக்கான், இவர் அடிக்கடி ஏதாவது ஒரு புது விஷயத்தை செய்து கொண்டே இருப்பார். அது சினிமாவாக இருந்தாலும் சரி, புதிய தொழில்நுட்ப விஷயங்களாகட்டும் அதில் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்பவர் ஷாருக்கான். தற்போது ட்விட்டரில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார்.

ட்விட்டரில் நேற்று வீடியோ ட்வீட் செய்துள்ள ஷாருக்கான், இனி உங்களுடன் வீடியோ ட்வீட் மூலம் தொடர்பு கொள்ளலாம். நான் நடிக்கும் புதிய படங்களின் மேக்கிங் வீடியோ உட்பட பல வீடியோக்களை உங்களுக்காக வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த புதிய அப்ளிகேஷன்(Application) வாயிலாக வீடியோ அப்லோட் செய்வது, எடிட் செய்வது, கேப்சர் செய்வது ஆகியவை எளிதாக செய்து விடலாம் என்று கூறியுள்ளார். டிவிட்டரில் வீடியோ ட்வீட் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையும் ஷாருக்கான் பெற்றுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி