செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் செவ்வாயை சுற்றிவிட்டு பூமிக்கு திரும்பிய ஓரியனில் பயணித்த 1,78,144 இந்தியர்களின் பெயர்கள்!…

செவ்வாயை சுற்றிவிட்டு பூமிக்கு திரும்பிய ஓரியனில் பயணித்த 1,78,144 இந்தியர்களின் பெயர்கள்!…

செவ்வாயை சுற்றிவிட்டு பூமிக்கு திரும்பிய ஓரியனில் பயணித்த 1,78,144 இந்தியர்களின் பெயர்கள்!… post thumbnail image
நியூயார்க்:-பூமிக்கு மேலே பறந்து, மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச் சென்று, மீண்டும் பத்திரமாக பூமிக்கு திருப்பி அழைத்துவரும் நோக்கில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா ’ஓரியன்’ என்ற விண்கலத்தை தயாரித்தது. முதல்கட்டமாக, ஆட்கள் யாரையும் ஏற்றிச் செல்லாமல் நான்கு பேர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஓரியன் விண்கலம், சோதனை முயற்சியாக அமெரிக்காவின் புளோரிடா நகரின் கடற்பகுதியில் இருந்து கடந்த 4-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

இந்த விண்கலத்தை ஏவுவதற்கு முன்னர், பூமிக்கு மேலே பறந்து செவ்வாய் கிரகத்தை சுற்றிவிட்டு வரும் இந்த விண்கலம் தொடர்பாக அறிவித்த நாசா, செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்றுவதற்கு முன்பு அவர்களின் பெயர்களை அனுப்பி வைத்தால் ஓரியன் விண்கலத்தில் சேகரித்து அனுப்புகிறோம் என்று கூறியிருந்தது. முதல் கட்டமாக. நாசாவின் ஓரியன் மிஷன் 4 முதல் 5 மணி நேரத்திற்குள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மக்களின் பெயர்களை கொண்டு சென்றுவிடும். பின்பு பசிபிக் பெருங்கடலுக்கு திரும்பி தரையிறங்கும். மேலும் நாசா நிறுவனத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்த ஒவ்வொரு நபருக்கும் செவ்வாய்க்கு செல்வதற்காக ஒரு போர்டிங் பாஸ் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பையடுத்து, உலகில் உள்ள 230 நாடுகளை சேர்ந்த 13 லட்சத்து 79 ஆயிரத்து 961 நபர்கள் செவ்வாய்க்கு சென்றுவர விருப்பம் தெரிவித்து தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர்.

இந்தப் பெயர்கள் எல்லாம் ஓரியனில் உள்ள ஒரு ‘சிப்’பில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதனையடுத்து, கடந்த 4-ம் தேதி பூமியில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஓரியன், பூமியின் மேற்பரப்பான விண்வெளியில் தனது 5,700 கிலோ மீட்டர் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு கடந்த 18-ம் தேதி அமெரிக்காவில் உள்ள புளோரிடா பகுதியில் உள்ள பசிபிக் பெருங்கடலில் பத்திரமாக தரையிறங்கியது. இந்நிலையில், ஓரியனில் இருந்த சிப்பில் பதிவு செய்யப்பட்டிருந்த பெயர்களில் 4,63,669 பேர் அமெரிக்க மக்கள் என தெரிய வந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக 1,78,144 இந்தியர்கள் செவ்வாய்க்கு செல்லும் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர் என்பது, குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி