விளையாட்டு மேக்கப் போடாவிட்டாலும் நான் அழகுதான் – நடிகை சுருதிஹாசன்!…

மேக்கப் போடாவிட்டாலும் நான் அழகுதான் – நடிகை சுருதிஹாசன்!…

மேக்கப் போடாவிட்டாலும் நான் அழகுதான் – நடிகை சுருதிஹாசன்!… post thumbnail image
சென்னை:-நடிகை சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக உள்ளார். மற்ற நடிகைகளை விட இவர் துணிச்சலாக கவர்ச்சி காட்டியும் வருகிறார். இதற்காகவே, அவருக்கு படவாய்ப்புகள் குவிகின்றன. சுருதியை பார்த்து மற்ற நடிகைகளும் மார்க்கெட்டை தக்க வைக்க ‘கவர்ச்சி’ பார்முலாவை கடைபிடிக்க தொடங்கி விட்டனர்.

மேக்கப் போடாமலேயே நான் அழகாகத்தான் இருக்கிறேன் என்று சுருதி ஹாசன் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறும்போது, சினிமா நடிகைகள் எல்லோரும் படத்தில் அழகாக தெரிகிறார்கள். அதற்கு காரணம் மேக்கப் போடுவதும், போகஸ் லைட்டும்தான் காரணம். இதுவே திரையில் நடிகைகளை அழகு படுத்தி காட்டுகிறது. என்னைப் பொருத்தவரை மேக்கப் போடாமலேயே அழகாக இருக்கிறேன். என் உடல் அமைப்பு இயற்கையாகவே அழகானது. என் பெற்றோர் அழகானவர்கள் என்பதால் நானும் அழகாக இருக்கிறேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி