செய்திகள்,திரையுலகம் நடிகை விஜய் தான் எங்கள் கடவுள்!… உருகும் மாணவி…

நடிகை விஜய் தான் எங்கள் கடவுள்!… உருகும் மாணவி…

நடிகை விஜய் தான் எங்கள் கடவுள்!… உருகும் மாணவி… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் நல்ல நடிகர் என்பதை விட நல்ல மனிதர் என்று மீண்டும் நிருபித்துள்ளார். இவர் வெளியே தெரியாமல் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் செய்த உதவி ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள டீக்கடையில் வேலை பார்ப்பவர் எம்.ஷாகுல்ஹமீது. இவரது மனைவி பாஹிராபேஹம்.

இவர்களது மகள் பாத்திமா சைதாப்பேட்டை அரசு பள்ளியில் பிளஸ்2 தேர்வில் 1109 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர். பாத்திமாவிற்கு இன்ஜினீயரிங் துறையில் படிக்க வேண்டும் என்பது கனவு. ஆனால் அவருடைய தந்தையின் வறுமை சூழல் காரணமாக மேற்படிப்பு படிக்க முடியவில்லை.
இதை தன் உதவியாளர் மூலம் அறிந்து கொண்ட விஜய் அந்த மாணவியின் முழு படிப்பு செலவையும் அவரே ஏற்றுள்ளார். இது குறித்து பாத்திமா கூறுகையில்,

இன்ஜினியரிங் துறையில் சாதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம், ஆனால், பணம் இல்லாத காரணத்தால் அது நடக்காது என்று நினைத்தேன். அந்த நேரத்தில் தான் விஜய் அண்ணா கடவுள் போல் வந்து என் படிப்பு செலவை ஏற்றார். என் வாழ் நாள் முழுவதும் இந்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டேன் என்று கண்ணீருடன் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி