செய்திகள்,விளையாட்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் டோனி ஆடமாட்டார்!…

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் டோனி ஆடமாட்டார்!…

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் டோனி ஆடமாட்டார்!… post thumbnail image
புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. உலகக்கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை காரணம் காட்டி முதல் 3 போட்டிகளில் இடம் பெறாத டோனி கடைசி இரண்டு போட்டிகளிலும் இடம்பெறவில்லை. அதனால் கடைசி 2 போட்டிகளுக்கும் வீராட் கோலி தான் கேப்டனாக இருப்பார்.

டோனியின் வலது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என தெரிகிறது. இந்த தொடர் முடிந்த பிறகு இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் வருகிறது 4-ந்தேதி நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் டோனி பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது. ஆனால் அவர் பங்கேற்காதது குறித்து உறுதியான தகவல் ஏதும் இல்லை. டோனி பங்கேற்காவிட்டால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை வீராட் கோலி வழி நடத்திச் செல்வார் என தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி