செய்திகள்,திரையுலகம் நடிகை ஜோதிகா ஜோடியாக ரகுமான்!…

நடிகை ஜோதிகா ஜோடியாக ரகுமான்!…

நடிகை ஜோதிகா ஜோடியாக ரகுமான்!… post thumbnail image
சென்னை:-மலையாளத்தில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய ‘ஹவ் ஓல்ட் ஆர் யு’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப் போகிறார் என அறிவித்தார்கள். அந்தப் படத்தை சூர்யாவின் சொந்தப் பட நிறுவனம் தயாரிக்க உள்ளது. மலையாளப் படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸ், தமிழ் ரீமேக்கையும் இயக்க உள்ளார்.

இந்தப் படம் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் ஜோதிகாவின் ஜோடியாக நடிக்க வேண்டிய கதாபாத்திரத்திற்காக பல நடிகர்களை அணுகியிருக்கிறார்கள். படத்தில் ஜோதிகாவிற்குத்தான் அதிக முக்கியத்துவம் என்பதால் பலரும் நடிக்கத் தயங்கினார்களாம். கடைசியாக ரகுமான், ஜோதிகா ஜோடியாக நடிக்க சம்மதித்து விட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி