செய்திகள்,திரையுலகம் சிம்பு பாணிக்கு மாறிய நடிகர் தனுஷ்!…

சிம்பு பாணிக்கு மாறிய நடிகர் தனுஷ்!…

சிம்பு பாணிக்கு மாறிய நடிகர் தனுஷ்!… post thumbnail image
சென்னை:-தன் மனதுக்கு தோன்றியதை வெளிப்படையாக பேசக்கூடியவர் சிம்பு. அதனால்தான் தானும் ஒரு நடிகன் என்றபோதும், நான் அஜீத் ரசிகன் என்று ஓப்பனாக சொல்வார். இதனால் மற்ற நடிகர்கள் தன்னை கோபித்துக் கொள்வார்களே என்றெல்லாம் அவர் கவலைப்படுவதில்லை. அதோடு நில்லாமல், அஜீத் நடித்த ஒவ்வொரு படத்தையும் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதை ஒரு கொள்கையாகவே கடைபிடித்து வருகிறார் சிம்பு.

அவரைத் தொடர்ந்து இப்போது தனுசும் தான் விஜய் ரசிகன் என்பதை வெளிப்படையாக சொல்லி வருகிறார். குறிப்பாக, ஒரு மேடையில், என்னை விட சிறந்த நடிகர் தனுஷ்தான் என்று விஜய் சொன்னதையடுத்து கண் கலங்கிப்போன தனுஷ். அவரைவிட நான் ஒன்றும் பெரிய நடிகன் இல்லை. அவர் அப்படி சொல்கிறார் என்றால் அது அவரது பெருந்தன்மை என்று தனது டுவிட்டரில் விஜய் பற்றி சொல்லியிருந்தார். அதிலிருந்து தனுசும் விஜய்யின் ரசிகராகி விட்டார். அதனால் தீபாவளிக்கு திரைக்கு வரும் கத்தி படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசிப்பதற்காக இப்போதே தயார் நிலையில் உள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி