செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3½ குறைய வாய்ப்பு!…

டீசல் விலை லிட்டருக்கு ரூ.3½ குறைய வாய்ப்பு!…

டீசல் விலை லிட்டருக்கு ரூ.3½ குறைய வாய்ப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. டீசல் விலையை பொறுத்தவரை, அதன் உற்பத்தி விலை நஷ்டத்தை ஈடுகட்டும்வரை, மாதந்தோறும் 50 காசுகள் விலை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாதந்தோறும் 50 காசுகள் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை குறைந்துள்ளது.

இதனால், முதல்முறையாக கடந்த மாத பின்பாதியில் எண்ணெய் நிறுவனங்களுக்கு டீசல் விற்பனை மூலம் லாபம் கிடைக்கத் தொடங்கியது. லிட்டருக்கு 35 காசுகள் லாபம் கிடைத்தது.இந்த லாபம், இந்த மாதத்தின் முன்பாதியில் லிட்டருக்கு ரூ.1.90 ஆக உயர்ந்தது.நடப்பு மாதத்தின் பின்பாதியில், அதாவது, கடந்த 15-ந் தேதிக்கு பிறகு, இந்த லாபம் லிட்டருக்கு ரூ.3.56 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம், 15 நாட்களில் லாப அளவு, ஏறத்தாழ இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

எனவே, இந்த லாபத்தின் பலனை நுகர்வோருக்கு அளிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.அந்த வகையில், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.56 குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பு, 19ம் தேதிக்குப் பிறகு வெளியாகும் என்று தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி