செய்திகள்,திரையுலகம் ஷாரூக்கானுடன் மோதுவதை தவிர்த்த ஹாலிவுட் நடிகர்!…

ஷாரூக்கானுடன் மோதுவதை தவிர்த்த ஹாலிவுட் நடிகர்!…

ஷாரூக்கானுடன் மோதுவதை தவிர்த்த ஹாலிவுட் நடிகர்!… post thumbnail image
மும்பை:-இந்திய சினிமாவின் கிங்காக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஷாரூக்கான். இவரது நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளியாக இருக்கும் படம் ஹேப்பி நியூ இயர். ஷாரூக் உடன் அபிஷேக், போபன் இரானி, சோனு சூட், தீபிகா படுகோனே என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். பராகான் இயக்கியுள்ளார். சுமார் 4000 தியேட்டர்களில் ஹேப்பி நியூ இயர் ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட், ஷியா லபியாப் உடன் நடித்துள்ள ஃபரி படத்தை இந்தியாவில் அக்டோபர் 17ம் தேதி ரிலீஸ் செய்ய எண்ணியிருந்தனர். ஆனால் இப்போது அதை அக்டோபர் 31ம் தேதிக்கு மாற்றிவிட்டனர். இதுப்பற்றி விசாரித்ததில் தீபாவளிக்கு ஷாரூக்கானின், ஹேப்பி நியூ இயர் படம் வெளியாக இருப்பதாலும், இந்தியாவில் அவருக்கு தான் மாஸ் அதிகம் என்பதாலும், அவரது படத்துடன் தேவையில்லாமல் மோத வேண்டாம் என்று கருதி ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி