செய்திகள்,விளையாட்டு இந்திய ஹாக்கி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!…

இந்திய ஹாக்கி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!…

இந்திய ஹாக்கி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!… post thumbnail image
இன்சியான்:-தென்கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, வலுவான தென்கொரிய அணியை எதிர்கொண்டது. இன்றைய அரையிறுதி ஆட்டம் இந்திய அணிக்கு கடும் சவாலாகவே இருந்தது. நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு ஆகாஷ்தீப் ஒரு கோல் அடித்து இந்திய அணியை 1-0 என முன்னிலை பெற வைத்தார்.

அதன்பின்னர் இரு தரப்பினரும் கடுமையாகப் போராடியும் கடைசி வரை கோல்கள் அடிக்கவில்லை. எனவே, 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான்-சீனா அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணியுடன், பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி மோத உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி