செய்திகள்,திரையுலகம் ரஜினி,அர்னால்டுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் ஷங்கர்!…

ரஜினி,அர்னால்டுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் ஷங்கர்!…

ரஜினி,அர்னால்டுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் ஷங்கர்!… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘ஐ’. இதில் விக்ரம்-எமி ஜாக்சன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

இரண்டரை வருடத்திற்கு முன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்பு முடிவடைந்துள்ளது. சமீபத்தில் ஐ படத்தின் பாடல்கள் மற்றும் டீசர்கள் பிரம்மாண்டமாக விழா நடத்தி வெளியிடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அர்னால்டு பங்கேற்றார். மேலும் இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி, புனித் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் ஷங்கரின் அடுத்த படத்தில் நடிக்க விரும்புவதாக அர்னால்டு கூறியிருந்தார். இவ்விழாவில் அர்னால்டு கலந்து கொண்டதற்கும், சிறப்பாக பேசியதற்கும் ஷங்கர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்த முக்கியமான தருணங்களில் தன்னுடன் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி