செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி விண்கலம் 2 ஆண்டு பணி முடித்து சாதனை!…

செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி விண்கலம் 2 ஆண்டு பணி முடித்து சாதனை!…

செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி விண்கலம் 2 ஆண்டு பணி முடித்து சாதனை!… post thumbnail image
வாஷிங்டன்:-செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் ’கியூரியாசிட்டி’ என்ற விண்கல ஆய்வகத்தை அனுப்பி வைத்தது. இதில், செவ்வாய் கிரகத்தில் நிலவும் தட்ப வெப்ப நிலை, காற்றின் வேகம், நிலபரப்பின் தன்மை உள்ளிட்டவற்றை துள்ளியமாக போட்டோ, எடுத்து அனுப்ப கூடிய அதிநவீன காமிராக்கள் மற்றும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த விண்கலம் 8 மாத நீண்ட நெடிய பயணத்துக்கு பிறகு கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்டு 6ம் தேதி செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது.அங்கு கியூரியாசிட்டி விண்கலம் சக்கரம் மூலம் சுமார் 3 மைல் உயர மலையின் மீது ஏறி சென்றும், ஊர்ந்து சென்றும் பாறை, மண் உள்ளிட்ட மாதிரிகளை வெட்டி எடுத்தும், சுற்றுப்புற சூழலையும் ஆய்வு மேற்கொண்டது.தற்போது அது தனது 2 ஆண்டு பணியை முடித்து விட்டு வெற்றிகரமாக ஆய்வகத்துக்கு திரும்பி சாதனை படைத்துள்ளது. அடுத்த கட்டமாக அது முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது.இந்த தகவலை ‘நாசா’ மைய விஞ்ஞானி ஜேம்ஸ் எல்.கிரீன் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி