செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் அமெரிக்காவில் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதல்!…

அமெரிக்காவில் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதல்!…

அமெரிக்காவில் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதல்!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்காவில் ஹோனோ லுலூ கடல் பகுதியில் உள்ள வேக் தீவில் அமெரிக்க போர் விமானங்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது 2 விமானங்கள் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

அதை தொடர்ந்து அந்த 2 விமானங்களும் பசிபிக் கடலில் விழுந்தன. உடனே அமெரிக்க கடற்படையின் ரோந்து கப்பல் தேடும் பணியில் ஈடுபட்டது.அதில், ஒரு விமானி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றொரு விமானியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடலில் விழுந்த விமானங்களின் பாகங்கள் இன்னும் கிடைக்கவில்லை. விபத்துக்குள்ளான போர் விமானம் எப்/ஏ–18சி ஹார்னெட் வகையை சேர்ந்தது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி