செய்திகள்,திரையுலகம் காதலை மறந்து விட்டேன் – நடிகை நயன்தாரா அறிவிப்பு!…

காதலை மறந்து விட்டேன் – நடிகை நயன்தாரா அறிவிப்பு!…

காதலை மறந்து விட்டேன் – நடிகை நயன்தாரா அறிவிப்பு!… post thumbnail image
சென்னை:-இரண்டு முறை காதலித்து, தோல்வி அடைந்தவர் நடிகை நயன்தாரா. சமீபத்தில், ஒரு படத்தை பார்த்த நயன்தாரா, அந்த படத்தின் க்ளைமாக்ஸ், தன் பழைய காதலை ஞாபகப்படுத்தி விட்டதால், கண் கலங்கியதாக செய்திகள் வெளியாகின.நயன்தாரா அதுபற்றி கூறுகையில், அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ், என்னை கலங்க வைத்துவிட்டது உண்மை தான்.

ஆனால், நான் பழைய காதலை நினைத்து கண் கலங்கியதாக கூறுவதெல்லாம் தவறு. என் வாழ்க்கையில் நடந்த அந்த கசப்பான அனுபவங்களை எப்போதோ மறந்து விட்டேன். அதை திரும்பவும் மனதில் அசைபோட்டு, என்னை வருத்திக் கொள்ள நான் ஒருபோதும் நினைத்ததில்லை என, கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி