செய்திகள் 27 வயது தாயை பாட்டியாக்கிய 12 வயது சிறுமி!…

27 வயது தாயை பாட்டியாக்கிய 12 வயது சிறுமி!…

27 வயது தாயை பாட்டியாக்கிய 12 வயது சிறுமி!… post thumbnail image
லண்டன்:-13 வயது காதலன் மூலம் பிறந்த குழந்தையை பிரசவித்ததன் மூலம், வடக்கு லண்டனை சேர்ந்த 12 வயது சிறுமி, பிரிட்டைன் நாட்டில் இளம் வயதிலேயே பாட்டியான தகுதியை தனது 27 வயது தாயாருக்கு பெற்றுத் தந்துள்ளார்.அங்குள்ள ஆரம்பநிலைப் பள்ளியில் படித்து வரும் அந்த சிறுமி, தனது வீட்டின் அருகில் வசிக்கும் 13 வயது சிறுவனிடம் நெருங்கிப் பழகினாள்.

இதன் விளைவாக கர்ப்பமடைந்த அவள் கடந்த வாரம் 7 பவுண்டு எடையுள்ள குழந்தையை பிரசவித்தாள்.பிறந்த குழந்தையுடனும், பிரசவித்த மகளுடனும், போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கும் அந்த பெண்ணின் தாயார், பெற்றோர் இருவரும் ஒற்றுமையாக இருந்து குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.உடல்நிலை சற்று தேறிய பின்னர் தனது மகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்பப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி