செய்திகள்,திரையுலகம் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை தயாரித்த லைகா நிறுவனத்துக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய மாணவர் அமைப்புகள்!…

விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை தயாரித்த லைகா நிறுவனத்துக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய மாணவர் அமைப்புகள்!…

விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை தயாரித்த லைகா நிறுவனத்துக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய மாணவர் அமைப்புகள்!… post thumbnail image
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கத்தி. இந்த படத்தை ஐங்கரன் பிலிம்ஸ்தான் முதலில் தயாரித்தது. ஆனால் அதையடுத்து அவர்களுக்கு சம்பளத்திற்கான செக் வழங்கியபோதுதான் அதில் லைகா நிறுவனத்தின் பெயர் இருந்ததாம். அதையடுத்து ஐங்கரன் பிலிம்சிடம் கேட்டபோது, இரண்டு நிறுவனமும் ஒன்றுதான் என்றார்களாம். அதோடு, இதனால் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லி படப்பிடிப்பை தொடர வைத்திருக்கிறார்கள்.

ஆனால், ஆரம்பத்தில் இந்த விசயம் சர்ச்சையானபோது, லைகாவிடமிருந்து படத்தை முழுவதுமாக ஐங்கரன் பிலிம்சிடம் மாற்றி விட்டதாகத்தான் கூறிவந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், இப்போதோ லைகா நிறுவனம்தான் கத்தியை தயாரித்துள்ளது எனறு ஓப்பனாக கூறுபவர், அந்த நிறுவனத்துக்கு எதிரான ஆதாரம் ஏதாவது இருந்தால் கொண்டு வாருங்கள் நானும் உங்களுடன் இணைந்து போராடுகிறேன் என்று கத்தி படத்திற்கு எதிராக போர்க்கொடி பிடித்திருக்கும் மாணவர்கள் அமைப்புகளிடம் கூறியுள்ளார்.

அதையடுத்து, லைகா நிறுவனத்துக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய மாணவர் அமைப்புகள் அவற்றை முருகதாஸை சந்தித்து கொடுக்க தயாராகிவிட்டனர். ஆனால் முருகதாஸோ, அவர்களுக்கு பிடிகொடுக்காமல், இதோ அதோ என்று நாட்களை கடத்திக்கொண்டு வருகிறாராம். இதனால் டென்சனான மாணவர் அமைப்புகள், விஜய் வீடு, முருகதாஸ் வீடு, கத்தி அலுவலகம் ஆகிய ஏரியாக்களில் முற்றுகையிட ஆலோசித்து வருகிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி