அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் எபோலா நோய் தடுப்பு மருந்தை நைஜீரியாவுக்கு வழங்க ஒபாமா மறுப்பு?…

எபோலா நோய் தடுப்பு மருந்தை நைஜீரியாவுக்கு வழங்க ஒபாமா மறுப்பு?…

எபோலா நோய் தடுப்பு மருந்தை நைஜீரியாவுக்கு வழங்க ஒபாமா மறுப்பு?… post thumbnail image
நைஜர்:-எபோலா காய்ச்சல் எனப்படும் வைரஸ் நோய் ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, சியானா, சையர் லியோன் ஆகிய 4 நாடுகளில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை சுமார் ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். எபோலா காய்ச்சல் அறிகுறிகளுடன் ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நைஜீரியாவில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி செய்யச் சென்ற அமெரிக்காவை சேர்ந்த இருவர் மீண்டும் தாய்நாடு திரும்பியபோது அவர்களுக்கும் எபோலா நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தது விமான நிலைய மருத்துவ அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரிய வந்தது.அமெரிக்க ஆராய்ச்சி கூடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வரும் எபோலாவுக்கு எதிராக மாற்று மருந்தின் ஆராய்ச்சியில் ஆரம்பநிலை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், எபோலாவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த இரு அமெரிக்கர்களுக்கும் சோதனை முயற்சியாக இந்த மருந்து அளிக்கப்பட்டு, அவர்கள் எபோலாவின் தாக்கத்தில் இருந்து விடுபட்டதாகவும் சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.

’ஸ்மேப்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த மருந்தினை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்து எபோலாவுக்கு மேலும் பல உயிர்கள் பலியாவதை தடுத்து உதவிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு நைஜீரிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.இந்த வேண்டுகோளை அமெரிக்க அதிபர் ஒபாமா நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.நைஜீரியாவுக்கோ, மற்ற தென்னாப்பிரிக்க நாடுகளுக்கோ ஆராய்ச்சி நிலையில் இருக்கும் ஒரு மருந்தினை எபோலாவுக்கான மாற்று மருந்தாக தன்னால் வழங்க முடியாது என்று ஒபாமா கைவிரித்து விட்டதாக நைஜீரியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி