செய்திகள்,விளையாட்டு இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்!…

இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்!…

இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்!… post thumbnail image
சவுத்தாம்ப்டன்:-இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில், இந்தியா, 1–0 என, முன்னிலை வகிக்கிறது.மூன்றாவது டெஸ்ட், சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. இந்திய பவுலர்கள் சொதப்ப, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 569 ரன்கள் குவித்து, ‘டிக்ளேர்’ செய்தது.மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 323 ரன்கள் எடுத்தது.

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. ‘பாலோ–ஆன்’ தவிர்க்க 47 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் இந்தியா களமிறங்கியது. தோனி(50), முகமது சமி(5) வந்த வேகத்தில் வெளியேற, கூடுதலாக 7 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 330 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, ‘பாலோ–ஆன்’ ஆனது.இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட் வீழ்த்தினார். இந்தியாவுக்கு ‘பாலோ–ஆன்’ கொடுக்காத இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. ராப்சன்(13) ஏமாற்றினார். பேலன்ஸ் 38 ரன்களுக்கு ரவிந்திர ஜடேஜா ‘சுழலில்’ வீழ்ந்தார். அதிரடியாக ரன் சேர்த்த இயான் பெல்(23), ஜோ ரூட்(56), ஜடேஜா வலையில் சிக்கினர். மீண்டும் அசத்திய கேப்டன் அலெஸ்டர் குக், அரைசதம் கடந்தார்.

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்து, ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு 445 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. குக்(70) அவுட்டாகாமல் இருந்தார்.கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு மீண்டும் ‘டாப்–ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். முரளி விஜய்(12) அநியாயமாக ரன் அவுட்டானார். மொயின் அலி ‘சுழலில்’ புஜாரா(2) வெளியேறினார். ஷிகர் தவான்(37) தாக்குப்பிடிக்கவில்லை. மொயின் அலியிடம் விராத் கோஹ்லியும்(28) சிக்கினார்.ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்து, 333 ரன்கள் பின்தங்கியிருந்தது. ரகானே(18), ரோகித் சர்மா(6) அவுட்டாகாமல் இருந்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி