செய்திகள்,திரையுலகம் ரூட்டை மாற்றும் நடிகை ஸ்ரேயா!…

ரூட்டை மாற்றும் நடிகை ஸ்ரேயா!…

ரூட்டை மாற்றும் நடிகை ஸ்ரேயா!… post thumbnail image
சென்னை:-எனக்கு 20 உனக்கு 18 படத்தில் அறிமுகமான ஸ்ரேயா, ரஜினி, விஜய், தனுஷ், ஆர்யா, ஜீவா என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் வடிவேலுவுடன் இந்திரலோகததில் நா.அழகப்பன் படத்தில் குத்தாட்டம் ஆடியதையடுத்து ஸ்ரேயாவின் மார்க்கெட் அவுட்டானது.

அதனால் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்த அவர், தெலுங்கில் மறைந்த நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜூனா, அவரது மகன் நாக சைதன்யா ஆகியோர் நடித்த மனம் படத்தில் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் ஹிட்டானதால் இப்போது மேலும் சில தெலுங்குப்பட வாய்ப்புகளை பெற்றிருக்கிறார்.இதில் இந்தியில் வெளியான ஓ மைகாட் என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ்க்கு ஜோடியாக நடிக்கிறாராம். மனம் படத்திலேயே ஓரளவு மெச்சூரிட்டியான ரோலில் நடித்த ஸ்ரேயா, இந்த ரீமேக் படத்தில் வெங்கடேஷின் மனைவியாக நடிக்கிறாராம்.

இளம் வயது மனைவியான அந்த வேடத்தில் இதுவரை பார்க்காத வித்தியாசமான ஸ்ரேயாவாக அவரை அந்த கதாபாத்திரம் வெளிப்படுத்தியுள்ளதாம்.அதனால், இதையடுத்து இனி இளவட்ட கதாநாயகியாக நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதாக விடும் என்பதை புரிந்து கொண்ட ஸ்ரேயா, இனிமேல் நான் இந்த மாதிரியான மெச்சூரிட்டியான வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன். அதனால் இயக்குனர்கள் தயங்காமல் வித்தியாசமான குடும்ப வேடங்களுக்கு என்னை அணுகலாம் என்று அறிவித்திருக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி