செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் துரித உணவு வகைகள் 20 சதவீதம் தரம் குறைந்தவை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!…

துரித உணவு வகைகள் 20 சதவீதம் தரம் குறைந்தவை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!…

துரித உணவு வகைகள் 20 சதவீதம் தரம் குறைந்தவை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!… post thumbnail image
புதுடெல்லி:-நாடு முழுவதும் ‘பாஸ்ட் புட்’ எனப்படும் துரித உணவு கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் விற்கப்படும் உணவுப்பொருட்கள், தரமற்றதாக இருப்பதாக புகார்கள் கூறப்படுகின்றன. அதன்பேரில் மாநில, யூனியன் பிரதேச அரசு அதிகாரிகள் உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் – 2006-ன்படி, இத்தகைய உணவகங்களில் வழக்கமான கண்காணிப்பு பணிகளை அடிக்கடி மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் 2013-14 கால கட்டத்தில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு துரித உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் இருந்து, பால், பால் பொருட்கள், எண்ணெய்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அரசு சோதனைக்கூடங்களில் ஆய்வு செய்யப்பட்டன. இவ்வாறு 46 ஆயிரத்து 283 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்ததில், 9 ஆயிரத்து 265-க்கும் அதிகமான மாதிரிகள் தரம் குறைந்த அல்லது மட்டமான பொருட்களில் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டு மொத்தத்தில் இது 20 சதவீதம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தரம் குறைந்த உணவு பொருட்கள் தயாரிப்பதில் உத்தரபிரதேச மாநில உணவகங்கள் முதலிடத்தை பெற்றுள்ளன. இங்கு 2013-14 கால கட்டத்தில் 2 ஆயிரத்து 930 கடை உரிமையாளர்கள் மீது புகார் செய்யப்பட்டும், இதில் 1,919 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டும் உள்ளது. மேலும் இந்த மாநிலத்தில் இருந்து ரூ.4.47 கோடி அபராதமும் வசூலிக்கப்பட்டு உள்ளது.அடுத்ததாக மராட்டியத்தில் 2,557 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 66 பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது. 3-வது அரியானாவில் 260 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 166 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. உத்தரகாண்ட், ஜார்கண்ட், பீகார், டெல்லி போன்ற மாநிலங்களும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.நகர்ப்புறங்களை தொடர்ந்து கிராமப்புறங்களிலும் துரித உணவகங்கள் முளைத்து வரும் நிலையில், அங்கு தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் தரம் குறைந்தவை என கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி