செய்திகள்,திரையுலகம் தெலுங்கு படத்தில் நடிக்கும் நடிகர் சூர்யா!…

தெலுங்கு படத்தில் நடிக்கும் நடிகர் சூர்யா!…

தெலுங்கு படத்தில் நடிக்கும் நடிகர் சூர்யா!… post thumbnail image
சென்னை:-நடிகர் சூர்யாவின் படங்களுக்கு ஆந்திராவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இங்கு சுமாராக போன படங்கள் கூட தெலுங்கில் மிகுந்த வரவேற்பை பெருகின்றன. இதனால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிலர் சூர்யாவை நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்கள். இதற்கு சூர்யாவும் ஓகே சொல்லிவிட்டார். விரைவில் அவர் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரும்.

இதுகுறித்து சூர்யா கூறியிருப்பதாவது: தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பது அந்த மக்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடன். என்னுடைய படங்களுக்கு அவர்கள் அளித்து வரும் ஆதரவு மகத்தானது. எனது டப்பிங் படங்களை நேரடி படங்கள் போன்று ரசித்துப் பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நேரடியாக ஒரு படம் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. ஓகே சொல்லிவிட்டேன். ஆரம்பகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார் சூர்யா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி