செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து!…

இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து!…

இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து!… post thumbnail image
டெல்அவிவ்:-இஸ்ரேல் நாடு ஆகாய கார் என்ற புதிய போக்குவரத்து முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார் ஆகாயத்தில் இணைக்கப்பட்டிருக்கும் இரும்பு தூண்கள் வழியாக பயணம் செய்யும். இது காந்த சக்தியுடன் இயங்க கூடியதாகும்.

தூணை தொட்டபடி கார் பாய்ந்து செல்லும். இந்த கார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும். டெல்அவிவ் நகரில் உள்ள விமான தயாரிப்பு நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் தற்போது கார் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு இந்த பணி முற்றிலும் முடிந்து ஆகாய கார் இயக்கப்பட உள்ளது.அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்தில் பணியாளர்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கும் செல்லும் வகையில் அந்தரத்தில் தொங்கும் கேபிள் கார் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதே முறையை மையமாக வைத்து இந்த புதிய ஆகாய கார் திட்டத்தை உருவாக்கி உள்ளனர்.விரைவில் இஸ்ரேலில் உள்ள அனைத்து நகரங்களிலும் இந்த கார் திட்டத்தை கொண்டுவர உள்ளனர். இது சம்மந்தமாக கார் நிறுவனம் கூறும்போது, நவீன உலகில் இனி இதுபோன்ற போக்குவரத்து தான் உதவுவதாக இருக்கும். நாங்கள் இந்த போக்குவரத்தை தொடங்கியதற்கு பிறகு பல நாடுகளும் இந்த போக்குவரத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி