செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் சல்மான் கான் கார் விபத்து வழக்கில் அரசுத் தரப்பு சாட்சி திடீர் பல்டி!…

சல்மான் கான் கார் விபத்து வழக்கில் அரசுத் தரப்பு சாட்சி திடீர் பல்டி!…

சல்மான் கான் கார் விபத்து வழக்கில் அரசுத் தரப்பு சாட்சி திடீர் பல்டி!… post thumbnail image
மும்பை:-மும்பை பந்த்ரா பகுதியில் கடந்த 2002ம் ஆண்டு நடிகர் சல்மான் கான் ஓட்டி வந்த கார் மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் படுகாயமடைந்தனர். மும்பை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் குறித்து மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இன்றைய விசாரணையின்போது சாட்சி பல்டி அடித்ததால் சல்மான் கானுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்ததும் காரின் டிரைவர் இருக்கையில் இருந்து சல்மான்கான் வெளியேறி அந்த இடத்தைவிட்டு ஓட்டம் பிடித்ததை நான் பார்த்தேன் என்று காவல்துறை பதிவு செய்தது தவறானது என்று முக்கிய சாட்சியான சச்சின் காதம் நீதிபதி தேஷ்பாண்டேவிடம் தெரிவித்தார். இவர் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள நீல்சாகர் ஓட்டலில் செக்யூரிட்டியாக வேலை பார்த்தவர்.முன்னதாக இவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், காரின் டிரைவர் சீட்டில் இருந்து சல்மான் கான் இறங்கி அந்த இடத்தை விட்டு சென்றதாக கூறியிருந்தார்.

ஆனால், இப்போது அவ்வாறு கூறவில்லை என்று பிறழ் சாட்சியம் அளித்த சச்சின் காதம், பெரிய கார் ஒன்று கடையின் ஷட்டரில் மோதியது என்று மட்டும்தான் கூறினேன் என்கிறார்.அரசுத் தரப்பு விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்காததால் அவரை பிறழ் சாட்சியாக கருத வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். எனினும், இதுதொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.முன்னதாக காதரிடம் சல்மான் கானின் வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தியபோது, விபத்தை நேரில் பார்க்கவில்லை என்றும் சத்தம் கேட்டு வந்தபோது கார் கடையில் மோதியிருந்ததை பார்த்ததாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி