அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் குஜராத் காவல்துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு!…

குஜராத் காவல்துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு!…

குஜராத் காவல்துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு!… post thumbnail image
அகமதாபாத்:-குஜராத் காவல்துறையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மாநிலத்தின் முதல் பெண் முதல்வரான ஆனந்தி பட்டேல் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக இன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், “சமுதாயத்தில் பெண்கள் உயர அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டியது அவசியம். எனவே, எனது அரசு காவல்துறை தேர்வில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது” என்றார்.

முன்னதாக, காந்தி நகரில் ஆயுதப்படை போலீசாரின் பயிற்சி நிறைவு விழாவில் பேசிய முதல்வர் ஆனந்தி பட்டேல், நாட்டிலேயே குஜராத்தில்தான் குற்றங்கள் குறைவு என்று குறிப்பிட்டார்.அமைதியும் மத நல்லிணக்கமும் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. கடந்த பத்தாண்டுகளில் குஜராத் மாநிலம் எந்த ஒரு பெரிய மத கலவரத்தையும் பார்த்ததில்லை. இதுவே வளர்ச்சியை கொண்டு வருவதற்கு எங்களுக்கு உதவியாக இருந்தது என்றும் ஆனந்தி பட்டேல் குறிப்பிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி