செய்திகள்,முதன்மை செய்திகள் மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிப்போம் என மலேசிய அரசு அறிவிப்பு!…

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிப்போம் என மலேசிய அரசு அறிவிப்பு!…

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிப்போம் என மலேசிய அரசு அறிவிப்பு!… post thumbnail image
கோலாலம்பூர்:-மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து சீனாவின் தலைநகர் பீஜிங்கிற்கு கடந்த மார்ச் 8ம் தேதி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 ரக விமானம் நடுவானில் மாயமாகி போனது. இதில் பயணம் செய்தவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை. விமானத்தை தேடும் பணி இந்திய பெருங்கடல் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. எனினும் விமான தேடுதல் வேட்டையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், மாயமான விமானம் குறித்து நியூசிலாந்து நாட்டை சேர்ந்த எழுத்தாளர்கள் ஈவான் வில்சன் மற்றும் ஜெப் டெய்லர் இருவரும், விரைவில் வெளிவர உள்ள புதிய புத்தகத்தில், விமானம் விபத்தில் சிக்கவில்லை என தெரிவித்துள்ளனர். அது முன்பே திட்டமிடப்பட்டு, சரியாக கணிக்கப்பட்டு நடத்தப்பட்டு உள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். நியூசிலாந்து நாட்டை சேர்ந்த எழுத்தாளரும், வர்த்தக விமானத்தின் விமானியும் மற்றும் ஹாமில்டன் நகர கவுன்சிலருமானவர் ஈவான் வில்சன்.இவர், வைகாடோ டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தியாளர் ஜெப் டெய்லர் என்பவருடன் இணைந்து புதிதாக புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். குட் நைட் மலேசியன் 370 தி ட்ரூத் பிஹைண்ட் தி லாஸ் ஆப் பிளைட் 370 என்ற பெயரிடப்பட்ட இந்த புத்தகத்தில் மாயமான விமானம் குறித்து அதன் பின்னணியில் உள்ள உண்மையை தெரியப்படுத்த ஒரு முறையை கையாண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டெய்லர் கூறும்போது, அது முன்பே திட்டமிடப்பட்டது. முன்பே கணிக்கப்பட்டது. அது மீண்டும் நடைபெற அனுமதிக்க கூடாது என்று கூறியுள்ளார். அடுத்த கட்ட விமான தேடுதல் வேட்டையில் ஜூன் மத்தியில் ஈடுபட சீனாவின் ராணுவ கப்பல் மற்றும் நெதர்லாந்து நாட்டின் சர்வே கப்பல் ஆகியவை முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் விமானம் குறித்த இந்த புத்தகம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.எழுத்தாளர்கள் இருவரும், விமானம் குறித்து விரிவாக அலசி ஆராய்ந்து அது குறித்த முடிவை முதன்முறையாக நாங்கள் வெளியிடுகிறோம். விமானம் பயணித்த பாதை, இந்திய பெருங்கடலில் விமானம் மூழ்குவதற்கு யாரை பொறுப்பாளி என நாங்கள் நம்புகிறோம் ஆகியவற்றை நாங்கள் வெளியிடுகிறோம் என்றும் வில்சன் தெரிவித்துள்ளார். புத்தகத்தில், விமானம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மார்ச் 8ந்தேதி புறப்படுவதில் இருந்து தொடங்குகிறது.

அதிகாரிகள் உண்மையை தெரிவிக்க தைரியம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என டெய்லர் கூறியுள்ளார். இதற்காக எழுத்தாளர்கள் இருவரும் மலேசியாவிற்கு பயணம் செய்துள்ளனர். அதிகாரிகள் மற்றும் விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை பேட்டி கண்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.விமானம் மாயமாகி 100 நாட்கள் கடந்த நிலையில், அதனை தேடுவது உண்மையில் அதிக சவாலான ஒன்றாக உள்ள நிலையில், விமானத்தை தேட நாங்கள் மீண்டும் புத்துணர்வுடன் தயாராக உள்ளோம் என்று மலேசியாவின் போக்குவரத்து துறை மந்திரி ஹிசாமுத்தீன் உசைன் தெரிவித்துள்ளார்.

விமானத்தை தேடுவதில் மிக கடினமான சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்பட்டதற்காக அரசுக்கு பாராட்டுகள் கிடைக்கும். அதற்கு சாதகமாக வரலாறு நியாயத்தை தீர்மானிக்கும் எனவும் உசைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விமானம் மாயமாகி 100 நாட்கள் கடந்த நிலையில், அதன் இழப்பு அனைத்து மலேசிய மக்களின் மனதிலும் வலியை தோற்றுவித்துள்ளது. உலக மக்களையும் மனதளவில் பாதித்துள்ளது.
விமானம் கண்டுபிடிக்கப்படும் வரையில், எங்களால் ஓய்வெடுக்க முடியாது. ஓய்வெடுக்கவும் மாட்டோம். விமானிகள் மற்றும் பயணிகளின் குடும்பத்தினரை நாங்கள் கைவிட்டு விட முடியாது. நாங்கள் மாயமான விமானத்தை கடவுளின் ஆசியுடன் கண்டுபிடிப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி