செய்திகள்,திரையுலகம் நீச்சல் உடை அணியவே மாட்டேன் என நடிகை தமன்னா உறுதி!…

நீச்சல் உடை அணியவே மாட்டேன் என நடிகை தமன்னா உறுதி!…

நீச்சல் உடை அணியவே மாட்டேன் என நடிகை தமன்னா உறுதி!… post thumbnail image
சென்னை:-இந்தித் திரையுலகில் ஹம்சகல்ஸ் படத்தின் மூலம் மீண்டும் நுழையக் காத்திருக்கிறார் நடிகை தமன்னா. மல்டி ஸ்டார் படமாக உருவாகி வரும் இந்த நகைச்சுவைப் படம் அவருக்கு ஒரு நல்ல திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறார். தற்போது இந்த படத்தின் பிரமோஷன் வேலைகளுக்காக பல ஊர்களுக்கு சுற்றி வருகிறார் தமன்னா. படத்தில் நடித்துள்ள மற்ற இரண்டு ஹீரோயின்களைக் கூட ஒரம்கட்டி விட்டு தமன்னா படத்தை பிரமோட் செய்வதில் பிஸியாக இருக்கிறாராம்.

இந்திப் படத்தில் நடிக்கப் போனாலே ஆடை விஷயத்தில் இறங்கிப் போக வேண்டும். அங்கு கிளாமராக நடித்தால்தான் காலம் தள்ள முடியும். தமன்னாவும் முதல் படத்தில் படு கிளாமராகவே நடித்திருந்தார். இந்தப் படத்திலும் அப்படித்தான் நடித்துள்ளார். படத்தில் மூன்று ஹீரோயின்கள் என்பதால் படத்தின் இயக்குனர் மூவரையும் போட்டி போட வைத்து, ஆடை விஷயத்தில் தாராளமயத்தை உருவாக்கி விட்டார். இருந்தாலும் கிளாமராக மட்டுமேதான் நடிக்கத் தமன்னா தயாராக இருந்தாராம். நீச்சல் உடையில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.

படத்தில் சைப் அலி கானுடன் ஒரு காட்சியில் நான் நீச்சல் உடையில் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், நான் நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன் என தெளிவாகச் சொல்லிவிட்டேன். உண்மையைச் சொல்லப் போனால் நீச்சல் உடையில் நான் ஒரு நெருக்கடியையே உணர்கிறேன். இனி, எதிர் காலத்தில் கூட நான் படத்திற்காக நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன்.என்கிறார் தமன்னா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி