செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்: சென்னை அபார வெற்றி!…

ஐ.பி.எல்: சென்னை அபார வெற்றி!…

ஐ.பி.எல்: சென்னை அபார வெற்றி!… post thumbnail image
புதுடெல்லி:-சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல். 26வது போட்டி டெல்லியில் நடைபெற்றது.டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பீல்டிங் தேர்வு செய்தார். டெல்லி அணியைச் சேர்ந்த டி காக், முரளி விஜய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டி காக் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்தார். அவர் 16 பந்தில் 24 ரன் எடுத்திருக்கும்போது ரன் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த பீட்டர்சன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.

அடுத்து 3வது விக்கெட்டுக்கு விஜயுடன், தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடினர். இதனால் ரன் விகிதம் அதிரடியாக உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய கார்த்திக் 51 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவர் 36 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். விஜய் முரளி 30 பந்தில் 35 ரன் எடுத்து அவுட் ஆனார்.இறுதியில் வந்த டுமினி, ஜாதவ் அதிரடியாக விளையாட டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. டுமினி 17 பந்தில் 28 ரன்னும், ஜாதவ் 18 பந்தில் 29 ரன்னும் எடுத்தனர்.சென்னை அணி தரப்பில் ஹில்பெனாஸ், மோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 179 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெக்கல்லம்- ஸ்மித் களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். மெக்கல்லம் 32 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து ஸ்மித்துடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இருவரும் டெல்லி அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.இவர்கள் விக்கெட்டை எடுக்க டெல்லி அணி கேப்டன் பீட்டர்சன் பல்வேறு முயற்சி செய்தார். ஆனால் ஏதும் பலனளிக்கவில்லை. கடைசியில் ஸ்மித் 51 பந்தில் 79 ரன் எடுத்திருக்கும்போது அவுட் ஆனார். அதன்பின் ரெய்னாவுடன் டோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் சென்னை அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர்.சென்னை அணி 19.4 ஓவரில் 181 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ரெய்னா 47 ரன்னுடனும், டோனி 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

DEL – 1st Inning

Batsman R B M 4s 6s S/R
de Kock Q. run out Jadeja R. 24 16 15 3 2 150.00
Vijay M. c Du Plessis F. b Jadeja R. 35 30 61 2 1 116.67
Karthik D. c Sharma M. b Hilfenhaus B. 51 36 38 4 3 141.67
Pietersen K. b Sharma M. 0 1 0 0 0 0
Ratan S. L. c Pandey I. b Ashwin R. 0 2 4 0 0 0
Duminy J. not out 28 17 44 5 0 164.71
Jadhav K. not out 29 18 40 2 2 161.11
Extras: (w 5, lb 6) 11
Total: (20 overs) 178 (8.9 runs per over)
Bowler O M R W E/R
Hilfenhaus B. 3.6 0 34 1 9.44
Pandey I. 2.6 1 26 0 10.00
Sharma M. 3.6 0 51 1 14.17
Jadeja R. 3.6 0 23 1 6.39
Ashwin R. 3.6 0 29 1 8.06
Smith D. R. 0.6 0 9 0 15.00

CHE – Inning

Batsman R B M 4s 6s S/R
Smith D. R. c Vijay M. b Parnell W. 79 51 96 4 8 154.90
McCullum B. c Vijay M. b Ratan S. L. 32 35 49 5 0 91.43
Raina S. not out 47 27 62 6 1 174.07
Dhoni M. not out 12 5 15 1 1 240.00
Extras: (w 2, b 4, lb 5) 11
Total: (19.4 overs) 181 (9.2 runs per over)
Bowler O M R W E/R
Ratan S. L. 3.6 0 35 1 9.72
Shami M. 3.6 0 43 0 11.94
Parnell W. 3.6 0 29 1 8.06
Unadkat J. 3.4 0 47 0 13.82
Nadeem S. 3.6 0 27 0 7.50

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி