செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் உலகில் செல்வாக்குள்ள 100 பேர் பட்டியலில் இடம்பிடித்த தமிழர்!…

உலகில் செல்வாக்குள்ள 100 பேர் பட்டியலில் இடம்பிடித்த தமிழர்!…

உலகில் செல்வாக்குள்ள 100 பேர் பட்டியலில் இடம்பிடித்த தமிழர்!… post thumbnail image
சென்னை:-தமிழகத்தின் மிகச்சிறிய கிராமத்தில் பிறந்தவரான அருணாச்சலம் முருகானந்தம் பத்தாம் வகுப்பு படிப்பை பாதியிலேயே நிறுத்தியவராவார். வெல்டிங் நிறுவனம் ஒன்றில் உதவியாளராக வேலை செய்த முருகானந்தத்திற்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

ஒரு நாள் அவர் தனது மனைவி மறைத்து மறைத்து எதையோ எடுத்து செல்வதைப் பார்த்து எதை அவர் மறைத்துக்கொண்டு செல்கிறார் எனக்கேட்ட போது இதெல்லாம் பெண்கள் சமாச்சாரம் என்று கூறியிருக்கிறார். அப்போதுதான், அவரது மனைவி மாதவிடாய் காலங்களில் நாப்கினுக்குப் பதிலாக பழைய துணியை பயன்படுத்தி வருவது புரிந்தது.நாப்கின் விலை மிக அதிகமாக இருந்ததே இதற்கு காரணம். தமிழகம் முழுக்க உள்ள ஏழை குடும்ப பெண்களின் நிலை இது தான். எனவே, இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் முருகானந்தத்திற்கு ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து தீவிர தேடுதலில் ஈடுபட்டார்.

குறைவான விலையில் பெண்களுக்கு நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டார். அவரது தீவிர முயற்சிக்கு ஒரு கட்டத்தில் நல்ல பலன் கிடைத்தது. தனது சொந்த முயற்சியில் இந்த இயந்திரத்தை உருவாக்கிய இவர் இன்று பல்வேறு நாடுகளுக்கு அதை ஏற்றுமதி செய்து சாதனை படைத்து வருகிறார்.மேலும் தமிழகத்தில் உள்ள சுய உதவி குழு பெண்களுக்கு இந்த இயந்திரத்தை மலிவான விலையில் வழங்கி அவர்களின் வாழ்க்கை தரம் உயர பாடுபட்டு வருகிறார்.

இவரது இயந்திரத்தின் மூலம் தயாரிக்கப்படும் நாப்கின் தரமாகவும், விலை மிகக்குறைவாகவும் உள்ளது. ஏழை மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அவரது இந்த கண்டுபிடிப்பு உலகளாவிய அளவில் அவருக்கு பாராட்டுகளை குவித்துள்ளது.
தற்போது அமெரிக்காவில் உள்ள டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள தகவலில், உலகின் செல்வாக்குள்ள 100 பேர் பட்டியலில் முருகானந்தம் இடம் பிடித்துள்ளார்.முருகானந்தத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா விருது வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி