செய்திகள்,திரையுலகம் ‘கோச்சடையான்’ படத்தை பார்க்கும் மோடி!…

‘கோச்சடையான்’ படத்தை பார்க்கும் மோடி!…

‘கோச்சடையான்’ படத்தை பார்க்கும் மோடி!… post thumbnail image
சென்னை:-ரஜினி, நரேந்திர மோடி இடையே நெருக்கமான நட்பு உள்ளது. ரஜினி உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது மோடி நேரில் போய் நலம் விசாரித்தார். சமீபத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வந்த போதும் ரஜினியை அவரது வீட்டில் போய் நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தலில் மோடி வெற்றி பெற ரஜினி வாழ்த்து தெரிவித்தார். அப்போது கோச்சடையான் படத்தை பார்க்க நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குஜராத்தில் மோடி பார்ப்பதற்காக சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இது போல் இந்தி நடிகர், நடிகைகள் பார்ப்பதற்காகவும் சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளது.

கோச்சடையான் படம் வருகிற 9ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. 3500–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடுகின்றனர்.இதில் ரஜினி தந்தை, மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார்.நாயகியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். சரத்குமார், நாசர், ஆதி, ஷோபனா போன்றோரும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர். ரஜினி மகள் சவுந்தர்யா இப்படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி