செய்திகள்,திரையுலகம் என்னமோ ஏதோ (2014) திரை விமர்சனம்…

என்னமோ ஏதோ (2014) திரை விமர்சனம்…

என்னமோ ஏதோ (2014) திரை விமர்சனம்… post thumbnail image
சாக்லேட் பாயாக சுற்றி வரும் கெளதம் கார்த்திக் காதல் கைகூடாமல் இருக்கிறார். இந்நிலையில் ஒரு பெண்ணை ஆறு மாதம் காதலிக்கிறார்.ஒரு நாள் காதலை சொல்ல செல்லும்போது விபத்து ஏற்பட்டதால் காதலை சொல்ல முடியாமல் போகிறது. சிலநாட்கள் கழித்து மீண்டும் சொல்ல முயலும்போது, இவர் காதலித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது தெரிய வருகிறது.

காதலித்த பெண்ணின் திருமணத்திற்கு தண்ணியடித்துவிட்டு செல்லும் கெளதம் கார்த்திக்கை நாயகி ராகுல் ப்ரீத் காப்பாற்றுகிறார். இருவரின் நட்பும் வளர்ந்து பின்னர் அதுவே காதலாக மாறுகிறது.ஆனால் இருவரும் காதலை வெளிப்படுத்தாமல் பழகி வருகிறார்கள். ஒருகட்டத்தில் கெளதம் காதலை சொல்ல முற்படும்போது ராகுல் ப்ரீத்துக்கு வேறொருவருடன் திருமணம் செய்து வைக்க முயற்சி நடப்பதை அறிந்து சொல்லாமல் திரும்புகிறார். அதன்பின்னர் ராகுல் ப்ரீத் தன்னுடைய காதலை கெளதமிடம் சொல்ல வரும்போது, கெளதமின் கொள்கைப்படி அவர் இன்னொரு பெண்ணை காதலிப்பதாக கூறுகிறார். இப்படி ஒருவரை ஒருவர் சொல்லிக்கொள்ளாமல் சென்றுகொண்டிருக்கும் காதலின் முடிவு என்ன.இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

கடல் படத்திலேயே சுறுசுறுப்பாக வந்த கெளதம், இதில் சாக்லேட் பாயாக அசத்துகிறார். கள்ளங்கபடமில்லாத அவருடைய முகமே அவருடைய ப்ளஸ் பாயிண்ட்.
நாயகி ராகுல் ப்ரீத் தேறிவிடுகிறார்.இரண்டாவது நாயகியாக வரும் நிகிஷா பட்டேல் நடிப்பும் சொல்லிக்கொள்ளும்படி இருக்கிறது.படத்தின் முக்கிய கதாபாத்திரம் என்றால் அது பிரபுதான். படத்தை தாங்கிப்பிடித்திருப்பதும் அவர்தான். மேலும், அனுபமாகுமார், மனோபாலா, ஆகியோர் கொடுத்த கேரக்டர்களை சரியாக செய்துள்ளனர்.பாடல்கள் அனைத்தும் இளைஞர்களை ஆட்டம் போட வைக்கிறது.அனிருத் பாடியுள்ள “நீ என்ன அப்பாடக்கரா” பாடல் வரும்போது தியேட்டரே அதிர்கிறது.

மொத்தத்தில் ‘என்னமோ ஏதோ’ காதல் விளையாட்டு….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி