செய்திகள்,திரையுலகம் ‘கோச்சடையான்’ படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்தார் ரஜினி!…

‘கோச்சடையான்’ படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்தார் ரஜினி!…

‘கோச்சடையான்’ படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்தார் ரஜினி!… post thumbnail image
சென்னை:-கோச்சடையான் படம் மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது.இந்த தொழில்நுட்பம் ஆசியாவிலேயே முதன்முறையாக கோச்சடையான் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

உடல்நிலை சரியில்லாமல் சங்கப்பூரில் சிகிச்சை பெற்றுத்திரும்பிய பிறகு ரஜினியினால் டான்ஸ் ஆடுவது, ஃபைட் பண்ணுவது போன்ற கடினமான பணிகளை செய்ய முடியாது.எனவேதான் நடிப்பு பதிவாக்கம் மூலம் அவருக்கு கஷ்டம் கொடுக்காமல் கோச்சடையான படத்தை எடுத்திருக்கிறார் அவரது மகள் சௌந்தர்யா.

கோச்சடையான் படத்தில் ஆரம்பத்தில் சில நாட்கள் உற்சாகமாக நடித்த ரஜினியால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போய் ரொம்பவே சிரமப்பட்டாராம். எனவே ரஜினிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அவர் நடிக்க வேண்டிய 90 சதவிகித காட்சிகளை டூப்பை வைத்தே எடுத்திருக்கின்றனர்.விஜய் டிவி ஜோடி நிகழ்ச்சியில் நடனம் ஆடும் யுவராஜ் என்ற டான்ஸரும், மற்றொரு சிரிப்பு நடிகரும்தான் ரஜினிக்கு டூப் போட்டு நடித்துள்ளனர்.கோச்சடையான் படத்தின் நாயகியான தீபிகா உடன் ஒரு ஷாட்டில் கூட ரஜினி நடிக்கவில்லையாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி