செய்திகள்,திரையுலகம் 21 நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும் திரைப்படம் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’!…

21 நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும் திரைப்படம் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’!…

21 நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும் திரைப்படம் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’!… post thumbnail image
சென்னை:- பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பில் பரத் நடிக்கும் படம் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி‘ ஆகும்.இதில் பரத்துக்கு ஜோடியாக நந்திதா நடிக்கிறார். படிக்காத கிராமத்து இளைஞனுக்கும், மேல்படிப்பு பெற்ற பெண்ணுக்கு திருமணம் நடைபெறுகிறது. அதன்பின்னர் அவர்கள் இருவருக்கும் நடக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் கூற இருக்கும் படம்தான் இது.

இந்த படத்தில் பரத்துடன் 21 நகைச்சுவை நடிகர்கள் நடிக்கிறார்கள்.
பரம்பரை பரம்பரையாக சித்த வைத்திய தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவராக பரத் நடிக்கிறார்.அவருக்கு ஜோடியாக நந்திதா கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.இங்கே வடிவேலுவைப்போல் கன்னட பட உலகில் பிரபல நகைச்சுவை நடிகரான கோமல் குமாரை இந்த படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் செய்கிறோம்.

ஒரு நீக்ரோ பாடகருடன் சேர்ந்து கானா பாலா ஒரு பாடலை பாடியிருக்கிறார். ‘555’ படத்துக்கு இசையமைத்த சைமன், இசையமைக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.புஷ்பா கந்தசாமி, எஸ்.மோகன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி