செய்திகள்,திரையுலகம் பார்த்திபனின் படத்தில் நடிக்கும் சூர்யா, தனுஷ், ஆர்யா, அமலாபால், நஸ்ரியா!…

பார்த்திபனின் படத்தில் நடிக்கும் சூர்யா, தனுஷ், ஆர்யா, அமலாபால், நஸ்ரியா!…

பார்த்திபனின் படத்தில் நடிக்கும் சூர்யா, தனுஷ், ஆர்யா, அமலாபால், நஸ்ரியா!… post thumbnail image
சென்னை:-பார்த்திபன் தற்போது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதுடன் நீண்ட காலத்திற்கு பின்னர் அவரே இந்த படத்தை இயக்கவும் செய்கிறார். கே.சந்திரமோகன் தயாரிக்கும் இந்த படத்துக்கு அல்போன்ஸ் ஜோசப் இசையமைத்து வருகிறார்.

எதையும் புதுமையாக செய்யும் பார்த்திபன் இந்த படத்திலும் ஒரு புதுமையாக செய்கிறார். இந்த படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, அமலாபால், நஸ்ரியா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் கெளரவ வேடத்தில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தில் நடிக்க புதிதாக சூர்யாவும், தனுஷும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.கடந்த 1980 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நட்சத்திரம்‘ என்ற படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கெளரவ வேடத்தில் நடித்திருப்பார்கள்.

அதுபோலவே 1983ஆம் ஆண்டு வெளிவந்த உருவங்கள் மாறலாம் என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் கெளரவ வேடத்தில் நடித்திருப்பார்கள். இந்த இரண்டு படங்களுக்கு பின்னர் கோலிவுட்டின் முக்கிய நடிகர்கள் பலர் ஒரே படத்தில் கெளரவ வேடத்தில் நடிப்பது பார்த்திபன் படத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2015ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி