அரசியல்,செய்திகள் சிவகங்கையில் சிதம்பரத்திற்கு பதில் கார்த்தி சிதம்பரம் போட்டி!…

சிவகங்கையில் சிதம்பரத்திற்கு பதில் கார்த்தி சிதம்பரம் போட்டி!…

சிவகங்கையில் சிதம்பரத்திற்கு பதில் கார்த்தி சிதம்பரம் போட்டி!… post thumbnail image
புதுடெல்லி:-வருகிற மக்களவை தேர்தலில் 20 மாநிலங்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ள 50 வேட்பாளர்கள் கொண்ட நான்காவது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.இதுவரை இல்லாத அளவில் குறிப்பிடத்தக்க அம்சமாக தமிழ்நாட்டு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் இந்த முறை போட்டியிட மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த தேர்தல்களில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பதில் அவரது மகனும் வழக்கறிஞருமான கார்த்தி சிதம்பரம் போட்டியிடவுள்ளார்.அதே போல் முன்னாள் அமைச்சர் கே.வி.தங்கபாலு மற்றும் கப்பல்துறை மந்திரி ஜி.கே.வாசன் ஆகியோரும் இத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர். ஆனால் ராஜ்ய சபா எம்.பியான மணிசங்கர் அய்யர் தனது தொகுதியான மயிலாடுதுறையில் மீண்டும் போட்டியிடுகிறார்.

மேலும் முக்கிய தலைவர்களான மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத் ஜம்முகாஷ்மீரின் உத்தம்புர் தொகுதியிலும் திக்விஜய் சிங்கின் சகோதரரான மத்திய பிரதேசத்திலுள்ள விதிஷா தொகுதியில் பா.ஜ.க மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜை எதிர்த்து போட்டியிட உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி