செய்திகள்,திரையுலகம் படப்பிடிப்பில் விபத்து: காமெடி நடிகருக்கு கால் முறிவு!…

படப்பிடிப்பில் விபத்து: காமெடி நடிகருக்கு கால் முறிவு!…

படப்பிடிப்பில் விபத்து: காமெடி நடிகருக்கு கால் முறிவு!… post thumbnail image
சென்னை:-வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் முத்துக்காளை ஒருவர், பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற முத்துக்காளை தற்போது நடிகாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு புதுமுக ஹீரோக்களின் படங்கள், முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்று பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில், புது படம் ஒன்றில் நடித்து வரும் முத்துக்காளை, அப்படத்தின் படப்பிடிப்பின் போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். இதில் அவருடைய கால் முறிந்தது. உடனே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது காலில் கட்டுப்போட்டு மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். விபத்துக்குள்ளான முத்துக்காளையை, சினிமா பி.ஆர்.ஓ கோவிந்தராஜ் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் பல சினிமா பிரபலங்களும் முத்துக்காளையை நலம் விசாரித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி