செய்திகள் ‘மரணம்’ எப்போது வரும் என்பதை அறிய புதிய முறை கண்டுப்பிடிப்பு!…

‘மரணம்’ எப்போது வரும் என்பதை அறிய புதிய முறை கண்டுப்பிடிப்பு!…

‘மரணம்’ எப்போது வரும் என்பதை அறிய புதிய முறை கண்டுப்பிடிப்பு!… post thumbnail image
பின்லாந்து:-பின்லாந்தின் யுலு பல்கலைகழகத்தின் பேராசிரியராக பணியாற்றுபவர் மைகா அலா கோர்பெலா.இவர் அதிநவீன ரத்த பரிசோதனை முறையை கண்டுபிடித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ரத்தத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் அடிப்படையில் ஒருவர் ஆபத்தில் உள்ளாரா, இல்லையா என்பது குறித்து கண்டறிய முடியும்.

அந்த வகையில் பின்லாந்தில் 17,000 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நிலையில் இருக்கும் சிறுநீரக நோயாளிகள், இருதய நோயாளிகள் ஆகியோரின் ரத்த மாதிரிகளில் அவர்களின் உடல்நிலை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை இந்த ரத்தப் பரிசோதனை காட்டிக் கொடுத்துவிடும்.இதேபோல் பிற நோயால் தாக்கப்பட்டவர்களின் உடல்நிலையையும் இதன் மூலம் அறியலாம்.

நன்றாக இருப்பவர்களின் ரத்தத்துக்கும், நோயாளிகளின் ரத்தத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் உள்ளன.இதை கண்டறியும் நவீன சோதனை, நியூக்ளியர் மேக்னடிக் ரிசோனன்ஸ் (என்எம்ஆர்) ஸ்பெக்ட்ராஸ்கோபி என்று அழைக்கப்படுகிறது.இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுக்குள் ஒருவருக்கு இறப்பு ஏற்படுமா என்பதையும் கணிக்க முடியுமென தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி