செய்திகள்,விளையாட்டு பயிற்சியாளராகும் சச்சின் டெண்டுல்கர்…

பயிற்சியாளராகும் சச்சின் டெண்டுல்கர்…

பயிற்சியாளராகும் சச்சின் டெண்டுல்கர்… post thumbnail image
புதுடில்லி:-இந்தியாவின் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின், 40. கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற இவர், விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் பிரபல அடிடாஸ் நிறுவனத்தின் விளம்பர துாதுவராக உள்ளார்.

இந்நிறுவனம் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறது. இதன்படி, 2012ல் உலக கோப்பை (19 வயது) வென்ற இந்திய கேப்டன் உன்முக்த் சந்த், காஷ்மீர் வீரர் பர்வேஸ் ரசூல், விஜய் ஜோல், வோரா, மன்பிரீத் ஜுனேஜா, ரஸ் கலாரியா, சிராக் குரானா, அக்ஸ்தீப் நாத், விகாஷ் மிஸ்ரா, சர்பராஸ் கான், அபராஜித் பாபா ஆகியோரை புதிதாக தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கு சச்சின் வழிகாட்டியாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சச்சின் கூறுகையில்,‘‘இளம் வீரர்களுக்கு ஆலோசகராக செயல்பட இருப்பது, நான் அதிகம் காதலிக்கும் கிரிக்கெட்டுக்கு செய்யும் கைமாறாக கருதுகிறேன்,’’ என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி