திரையுலகம் விஜய்யை பாராட்டிய தனுஷ்…

விஜய்யை பாராட்டிய தனுஷ்…

விஜய்யை பாராட்டிய தனுஷ்… post thumbnail image

சிம்புக்கு போட்டியாக விஜய்யுடன் திடீரென சேர்ந்தார் தனுஷ். பொங்கல் வெளியீடாக “ஜில்லா” படம் இன்று ரிலீசாகிறது. இதை முன்னிட்டு சமீபத்தில் விஜய்யை சந்தித்த தனுஷ், அவருக்கு படம் வெற்றி பெற வாழ்த்து கூறினார். அத்துடன் ஜில்லா பாடலுக்கு அவருடன் சேர்ந்து நடனம் ஆடினார். இதை தனது “டுவிட்டர்” பக்கத்திலும் தானே வெளியிட்டு விஜய்யை பாராட்டி இருந்தார் தனுஷ். திடீரென விஜய் ரசிகராக தனுஷ் மாறியிருப்பது சிம்புக்கு போட்டியாக இருக்கலாம் என கோடம்பாக்கத்தில் கிசு கிசு பேச்சு எழுந்து உள்ளன.

அஜீத்தின் தீவிர ரசிகர் சிம்பு. தனது படங்களில் ஒரு காட்சியாவது அஜீத் புகழ் பாடும்படி நடித்து விடுவார். மன்மதன் படத்தில் அஜீத் ரசிகராகவே அவர் நடித்திருந்தார். சிலம்பாட்டம் படத்தில் பில்லா அஜீத் கெட்அப்பில் ஒரு காட்சியில் வருவார். அஜீத் படம் ரிலீசாகும்போது முதல் நாள் முதல் ஷோவை தியேட்டரில் சென்று அவர் பார்ப்பார். அதை அவரே பப்ளிசிட்டியும் செய்வார். இந்நிலையில்தான் விஜய் ரசிகனாக தன்னை அடையாளம் காட்ட ஆரம்பித்திருக்கிறார் தனுஷ். இது சிம்புக்கு போட்டியான செயல் என்று கூறி வருகின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி