திரையுலகம் திரையரங்கிற்கு வந்த ‘தல’!…

திரையரங்கிற்கு வந்த ‘தல’!…

திரையரங்கிற்கு  வந்த ‘தல’!… post thumbnail image

அஜீத்தின் ‘வீரம்’ படம் தமிழகம் முழுவதும் இன்று ரிலீசானது. வீரம் படம் திரையிடப்பட்ட தியேட்டர் களில் ரசிகர்கள் அஜீத்தின் கட்அவுட்டுகள், கொடி தோரணம் அமைத்து பட்டாசும் கொளுத்தினார்கள்.

அசோக்நகரில் உள்ள உதயம் தியேட்டரில் ‘ஜில்லா’ மற்றும் ‘வீரம்’ படங்கள் திரையிடப்பட்டு உள்ளன. இதனால் இன்று காலை தியேட்டர் முன்னால் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு நின்றனர். பாதுகாப்புக்கு ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.

அப்போது ஒரு ரசிகர் வீரம் படத்தில் அஜீத் வருவது போல் வெள்ளை வேட்டி சட்டையில் கண்ணாடி அணிந்து அஜீத் போலவே காரில் வந்தார். அவரை பார்த்ததும் அஜீத் என ரசிகர்கள் நம்பினார்கள். தல அஜீத் வாழ்க என கோஷமிட்டபடி காரை மொய்த்தனர். கூட்டத்தினர் காரில் அஜீத் இருக்கிறார் என நம்பி அவரை காண வந்தன. இதனால் நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை விரட்டினார்கள். அதன்பிறகு காரில் இருந்து அந்த ரசிகர் இறங்கி கூட்டத்தினரை பார்த்து கையசைத்தார். அவருடன் ரசிகர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி