முதன்மை செய்திகள்,விளையாட்டு அரசு உதவியை எதிர்பார்க்கும் ஒலிம்பிக் சாம்பியன் …

அரசு உதவியை எதிர்பார்க்கும் ஒலிம்பிக் சாம்பியன் …

அரசு உதவியை எதிர்பார்க்கும் ஒலிம்பிக் சாம்பியன் … post thumbnail image
பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் நடந்த செவிதிறனற்றவர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் 28 வயதான இந்திய மல்யுத்த வீரர் வீரேந்தர்சிங், 74 கிலோவினருக்கான பிரீஸ்டைல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.இது தவிர 2005-ம் ஆண்டில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கமும், 2008-ம் ஆண்டில் நடந்த உலக போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்று இருக்கிறார்.

வீரேந்தர்சிங் டெல்லியில் நேற்று சைகை மொழிபெயர்ப்பாளர் மூலம் அளித்த பேட்டியில், ‘நான் சர்வதேச போட்டிகளில் பல பதக்கங்கள் வென்று இருக்கிறேன். இருப்பினும் எனக்கு அரசு ஆதரவு அளிக்காதது வருத்தம் அளிக்கிறது. எனக்கு அரசு ஊக்கம் அளித்தால் நான் மேலும் சிறப்பாக செயல்பட முடியும். 2016-ம் ஆண்டில் பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் வழக்கமான வீரர்களுடன் போட்டியிடுவதே எனது இலக்காகும். அதற்கு நான் தயாராக அரசு உதவி செய்ய வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி