திரையுலகம்,முதன்மை செய்திகள் பிரபுவை நம்பி களம் இறங்கும் சசிகுமார்

பிரபுவை நம்பி களம் இறங்கும் சசிகுமார்

Director Sasikumar

காணொளி:-

இயக்குனர் சசிகுமார் இப்பொது பிசியான நடிகர் ஆகிவிட்டார் அவரது சூப்பர் ஹிட் படங்களான ‘நாடோடிகள்’ மற்றும் ‘போராளி’ படங்களுக்குப் பிறகு அவர் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக புது அவதாரம் எடுத்திருக்கிறார்.

தற்சமயம் அவர் ‘சுந்தரபாண்டியன்’ எனும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை இயக்குபவர், அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரபு. சசிகுமருடன் இந்த படத்தில் ஜோடி சேருபவர் லட்சுமி மேனன். இவர் வேறு யாருமல்ல ‘கும்கி’ படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தவர் தான். விஜய் சேதுபதி, சூரி என ஒரு பட்டாளாமே இதில் நடிக்கின்றனர்.

ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்தப் படத்தை தைரியமாக தயாரித்துக் கொண்டிருப்பது வேறுயாருமில்லை… சசிகுமாரேதான் அவர் உதவி இயக்குனரிடம் அவ்வளவு நம்பிக்கை, தனது சொந்த கம்பெனி புரொடக்ஷன் சார்பில் இந்தப் படத்தை உருவாகுகிறார். பிரபு சொன்ன கதை அந்த அளவு பிடித்துப் போனதால் தான் தானே நடித்து, தயாரிக்கவும் முடிவு செய்து அவரை ஊக்கப்படுத்தியுள்ளார்.

போராளி படத்தில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக புது அவதாரம் எடுத்தவர்…அதை தக்க வைப்பாரா என்று சுந்தரபாண்டியன் வந்தால் தெரிந்துவிடும்.[rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.